யாழில் டீசலை அருந்திய ஆண் குழந்தை பரிதாபமாக மரணம்
23 பங்குனி 2025 ஞாயிறு 11:26 | பார்வைகள் : 2167
யாழில் டீசலை அருந்திய ஆண் குழந்தை, சனிக்கிழமை அதிகாலை உயிரிழந்துள்ளது. ஊர்காவற்றுறை, நாரந்தனை தெற்கு பகுதியை சேர்ந்த ஒரு வயது 9 மாதங்கள் நிரம்பிய சதீஷ் ரஞ்சித் என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்,
குழந்தையின் தந்தை லான்மாஸ்டர் திருத்த வேலையில் கடந்த 18ஆம் திகதி ஈடுபட்டுள்ளார். பின்னர் டீசலை ஒரு போத்தலில் வைத்து விட்டு சென்றுள்ளார்.
இதன்போது அவ்விடத்திற்கு வந்த குழந்தை பானம் என நினைத்து டீசலை அருந்தியது. இந்நிலையில் குழந்தை மயக்கமுற்றது. பின்னர் குழந்தை ஊர்காவற்றுறை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குழந்தை சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை (22) அதிகாலை 2.30 மணியளவில் உயிரிழந்தது. குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
6 நாள்கள் முன்னர்
நினைவஞ்சலி
RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025


























Bons Plans
Annuaire
Scan