Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் 80,000 வேட்பாளர்கள் போட்டியிட தகுதி

இலங்கையில் 80,000 வேட்பாளர்கள் போட்டியிட தகுதி

21 பங்குனி 2025 வெள்ளி 12:07 | பார்வைகள் : 681


2025ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சித் தேர்தலில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களைச் சேர்ந்தவர்கள் என கிட்டத்தட்ட 80,000 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இந்தக் குழுவில் 107 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும் 49 சுயேட்சை குழுக்களும் போட்டியிடவுள்ளன.

இந்த தேர்தலில், 8,500 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளல் நேற்று மதியம் 12 மணியுடன் முடிவடைந்தது. 

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களால் தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட பல வேட்புமனுக்களும் நிராகரிக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையில், தேர்தல் வேட்பாளர்களின் பெயர்கள் அடுத்த வாரத்திற்குள் வர்த்தமானியில் வெளியிடப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்