புயல் : ஏழு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!!

21 பங்குனி 2025 வெள்ளி 07:17 | பார்வைகள் : 11964
பிரான்சின் ஏழு மாவட்டங்களுக்கு புயல், கடற் கொந்தளிப்பு போன்ற அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மார்ச் 21, இன்று வெள்ளிக்கிழமை இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புயல்!!
Haute-Garonne, Tarn, Hérault, Gard மற்றும் Bouches-du-Rhône ஆகிய ஐந்து மாவட்டங்களுக்கு புயல் காரணமாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அங்கு அதிகபட்சமாக மணிக்கு 120 கி,மீ வேகத்தில் புயல் வீசும் என தெரிவிக்கப்படுகிறது.
vagues-submersion!!
கடற்கொந்தளிப்பு காரணமாக Pyrénées-Orientales, Aude மற்றும் Hérault ஆகிய மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதில் Hérault மாவட்டத்துக்கு இரண்டு புயல் மற்றும் கடற்கொந்தளிப்பு என இரு எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025