Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் பாடசாலை கல்வியை இடைநிறுத்திய 29 வீத மாணவர்கள் 

இலங்கையில் பாடசாலை கல்வியை இடைநிறுத்திய 29 வீத மாணவர்கள் 

19 பங்குனி 2025 புதன் 14:12 | பார்வைகள் : 2014


இலங்கையிலுள்ள 3.5 மில்லியன் இளம் தலைமுறையினரில் 29 வீத பாடசாலை மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளை இடைநிறுத்தியுள்ளதாக 2024 உலகளாவிய பாடசாலைகளை அடிப்படையாக கொண்ட மாணவர் சுகாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

71 வீதமானோர் பாடசாலைக்கு செல்வதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த வருடம் 40 அரச பாடசாலைகளில் தரம் 08 முதல் 12 வரையிலான 3,843 மாணவர்களை இணைத்து இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

29.3 வீதமானோர் அதிக எண்ணெய் கலந்த உணவை பெற்றுக் கொள்வதுடன் 40.9 வீத மாணவர்கள் நாளாந்தம் அதிக சீனி கலந்த உணவுகளை உட்கொள்வதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.

இந்த சுகாதார ஆய்வறிக்கையானது சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக பிரதியமைச்சர் டொக்டர் ஹன்சக விஜேமுனி தலைமையில் சர்வதேச பிரதிநிதிகளின் பங்குபற்றலுடன் வௌியிடப்பட்டுள்ளது.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்