Meaux : தீயில் கருகி தாய்-மகள் பலி!!

18 பங்குனி 2025 செவ்வாய் 20:51 | பார்வைகள் : 4295
வீடொன்றில் திடீரென பரவிய தீயினால் இரு பெண்கள் பலியாகியுள்ளனர். 30 பேர் வெளியேற்றப்பட்டு வேறு இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் மார்ச் 17, திங்கட்கிழமை இரவு 11.50 மணி அளவில் Meaux (Seine-et-Marne) நகரில் இடம்பெற்றுள்ளது. அங்குள்ள Square Edmond-About கட்டிடத்தொகுதியில் உள்ள வீடொன்றில் இந்த தீ பரவியுள்ளது. மிக வேகமாக விளாசி எரிந்த தீ, கட்டிடம் முழுவதும் ஆக்கிரமித்தது.
12 தீயணைப்பு வாகனங்களுடன் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடினர்.
இச்சம்பவத்தில் 34 வயதுடைய பெண் ஒருவரும் அவரது 13 வயதுடைய மகளும் பலியாகியுள்ளனர். மேலும் அவர்களது 15 வயதுடைய மகள் சிறிய தீக்காயங்களுடன் உயிர்தப்பியுள்ளார். கட்டிடத்தில் வசித்த 20 குடும்பங்களைச் சேர்ந்த 30 பேர் வெளியேற்றப்பட்டு வேறு இடங்களில் தங்கவைக்கப்பட்டனர்.
இத்தீவிபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.