Paristamil Navigation Paristamil advert login

இரு இராணுவ வீரர்கள் விபத்தில் பலி!!

இரு இராணுவ வீரர்கள் விபத்தில் பலி!!

18 பங்குனி 2025 செவ்வாய் 08:42 | பார்வைகள் : 6197


இராணுவ வீரர்கள் பயணித்த வாகனம் ஒன்று தொடருந்துடன் மோதி விபத்துக்குள்ளானது. இதில் இரு இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

பா-து-கலேயின் Arras நகரில் இச்சம்பவம் மார்ச் 17, நேற்று முற்பகல் இடம்பெற்றுள்ளது. இராணுவ வாகனம் ஒன்று 11 மணி அளவில் Rue de Thélus வீதியில் உள்ள தொடருந்து கடவையை கடக்க முற்பட்டபோது, உள்ளூர் தொடருந்து ஒன்றுடன் மோதியுள்ளது.  இதில் பல மீற்றர் தூரத்துக்கு வாகனம் தூக்கி வீசப்பட்டது. 

இரு இராணுவ வீரர்கள் இதில் கொல்லப்பட்டனர். மேலும் சிலர் காயமடைந்தனர். தொடருந்து பயணிகளிலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்