Paristamil Navigation Paristamil advert login

ஐரோப்பிய ஒன்றியத்தின் அழைப்பை ஏற்க மறுத்த சீனா

ஐரோப்பிய ஒன்றியத்தின் அழைப்பை ஏற்க மறுத்த சீனா

17 பங்குனி 2025 திங்கள் 04:11 | பார்வைகள் : 2953


ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சீனா இடையேயான தூதரக உறவுகளின் 50வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் உச்சிமாநாட்டிற்கான அழைப்பை சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் நிராகரித்துள்ளார்.

ஜனாதிபதி ஜிக்கு பதிலாக ஐரோப்பிய கவுன்சில் மற்றும் ஆணையத்தின் தலைவர்களை பிரதமர் லி கியாங் சந்திப்பார் என்று சீனா ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளிடம் கூறியுள்ளது.

பிரஸ்ஸல்ஸில் நடைபெறும் உச்சிமாநாட்டின் போது சீனப் பிரதமர் வழக்கமாக கலந்துகொள்வார், அதே நேரத்தில் ஜனாதிபதி அதை சீனாவில் முன்னெடுத்து நடத்துவார் என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் சீனா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான அரை நூற்றாண்டு கால உறவுகளை நினைவுகூரும் வகையில் ஜனாதிபதி ஜி கலந்து கொள்ள வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் விரும்புகிறது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் அழைப்பை ஜனாதிபதி ஜி ஜின்பிங் ஏற்க மறுப்பதன் பின்னணியில் சீனாவின் ரஷ்ய ஆதரவு நிலையே என கூறப்படுகிறது.

மேலும், 2022ல் உக்ரைன் மீது ரஷ்யாவின் படையெடுப்பிற்கு பின்னரே சீனா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திகும் இடையேயான உறவில் லேசான விரிசல் ஏற்பட்டுள்ளது.

உக்ரைன் விவகாரத்தில் சீனா ரகசியமான ரஷ்யாவை ஆதரிப்பதாகவே ஐரோப்பிய ஒன்றியம் குற்றஞ்சாட்டி வருகிறது. அத்துடன் சீன மின்சார வாகன இறக்குமதிகளுக்கு கடந்த ஆண்டு ஐரோப்பிய ஒன்றியம் வரிகளை விதித்தது.

உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடான சீனாவும், அதன் மூன்றாவது பெரிய பொருளாதார அமைப்பான ஐரோப்பிய ஒன்றியமும், 2024 ஆம் ஆண்டின் பெரும்பகுதியை, அதிகப்படியான திறன், சட்டவிரோத மானியங்கள் மற்றும் ஒருவருக்கொருவர் சந்தைகளில் குவிப்பு போன்ற குற்றச்சாட்டுகள் தொடர்பாகப் பரஸ்பரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கழித்தனர்.

மானிய எதிர்ப்பு விசாரணைக்குப் பிறகு, அக்டோபரில், ஐரோப்பிய ஒன்றியம் சீனாவில் தயாரிக்கப்பட்ட மின்சார வாகனங்களுக்கு இரட்டை இலக்க வரிகளை விதித்தது.

இந்த நடவடிக்கை சீனாவிலிருந்து பலத்த எதிர்ப்புகளைப் பெற்றதுடன், பிராந்தி போன்ற சில ஐரோப்பிய ஒன்றிய தயாரிப்புகளை சீனாவில் விற்பனைக்கானத் தடைகளை உயர்த்தியது.

 

8 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

RAJADURAI

FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI

வயது : 44

இறப்பு : 14 Aug 2025

  • Ecology

    1

  • Live Link

வர்த்தக‌ விளம்பரங்கள்