Paristamil Navigation Paristamil advert login

இல் து பிரான்ஸ் : 450 கி.மீ போக்குவரத்து நெரிசல்!!

இல் து பிரான்ஸ் : 450 கி.மீ போக்குவரத்து நெரிசல்!!

10 மாசி 2025 திங்கள் 09:11 | பார்வைகள் : 2952


இன்று பெப்ரவரி 10,  திங்கட்கிழமை காலை இல் து பிரான்ஸ் மாகாணத்துக்குள் பலத்த போக்குவரத்து நெரிசல் பதிவானது.

450 கி.மீ தூரத்துக்கும் அதிகமாக போக்குவரத்து நெரிசல் பதிவானதாக தெரிவிக்கப்படுகிறது. செயற்கை நுண்ணறிவுக்கான மாநாடு இன்றும் நாளையும் பரிசில் இடம்பெறுவதை அடுத்து பல்வேறு போக்குவரத்து கட்டுப்பாட்டுக்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

அதை அடுத்தே இந்த போக்குவரத்து நெரிசல் பதிவானதாக தெரிவிக்கப்படுகிறது. 

மேலும், இன்று காலை A1, A4 மற்றும் A86 நெடுஞ்சாலைகளில் சிறு விபத்துக்களும் பதிவானதாக தெரிவிக்கப்படுகிறது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்