இங்கிலாந்து எதிராக அதிரடி சதம்…! சச்சினை பின்னுக்கு தள்ளிய ரோகித் சர்மா…!

10 மாசி 2025 திங்கள் 09:04 | பார்வைகள் : 2192
சச்சின் டெண்டுல்கரின் சாதனையை பின்னுக்கு தள்ளி ரோகித் சர்மா ஜாம்பவான்கள் வரிசையில் தனது இடத்தை பலப்படுத்தியுள்ளார்.
கட்டாக்கில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் சதம் விளாசி, இந்திய அணிக்கு நான்கு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியை தேடித் தந்துள்ளார்.
இந்த அதிரடி சதத்தின் மூலம் இந்திய கிரிக்கெட்டில் தலைசிறந்த தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவராக அவரது நிலையை உறுதி செய்துள்ளார்.
ரோஹித் சர்மா வெறும் 90 பந்துகளில் 119 ஓட்டங்கள் குவித்து, சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய தொடக்க ஆட்டக்காரர்களில் அதிக ஓட்டங்கள் எடுத்தவர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கரை பின்னுக்குத் தள்ளினார்.
ரோகித் சர்மா தற்போது 343 போட்டிகளில் இருந்து 15,404 ஓட்டங்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார், இதன் மூலம் அவர் 45.43 என்ற சிறப்பான சராசரியைக் கொண்டுள்ளார்.
சச்சின் டெண்டுல்கர் 346 போட்டிகளில் 15,335 ஓட்டங்கள் எடுத்திருந்தார்.
வீரேந்தர சேவாக் 15,758 ஓட்டங்களுடன் இந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருந்தாலும், ரோஹித் விரைவில் சேவாக்கின் ஓட்டங்களை கடந்து சாதனை படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.