Gennevilliers : கொலை முயற்சி.. 27 வயதுடைய ஒருவர் கைது!
9 மாசி 2025 ஞாயிறு 07:00 | பார்வைகள் : 6693
இலத்திரனியல் கண்காணிப்பு காப்பு அணிந்திருக்கும் ஒருவர் கத்தி ஒன்றினால் ஒருவரை கொல்ல முயற்சி செய்த நிலையில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் கடந்த பெப்ரவரி 2 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ள போதும், இது தொடர்பான தகவல்களை நேற்றைய தினமே காவல்துறையினர் வெளியிட்டனர், Gennevilliers (Hauts-de-Seine) நகரின் rue Pierre-Timbaud வீதியில், மாலை 4 மணி அளவில் நபர் ஒருவரைக் கத்தியினால் குத்தி தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.
தாக்குதலுக்கு இலக்கான நபர் படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தாக்குதலாளி சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடியுள்ள நிலையில், அவர் அணிந்திருந்த இலத்திரனியல் காப்பு அவரை விரைவாக கைது செய்ய அடையாளம் காட்டியுள்ளது. குறித்த 27 வயதுடைய குறித்த நபர் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டிருந்தவர் எனவும், அதை அடுத்தே அவருக்கு இலத்திரனியல் காப்பு அணிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan