பாடகி Aya Nakamura மீது துவேசம்... 13 பேர் நீதிமன்றத்தில்!!

8 மாசி 2025 சனி 19:57 | பார்வைகள் : 5996
பிரெஞ்சுப் பாடகி Aya Nakamura மீது நிற துவேசம் செய்த 13 பேர் விரைவில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர்.
ஒலிம்பிக்கின் ஆரம்ப நாள் நிகழ்வின் போது அவர் பாடல் பாடுவார் என அறிவிக்கப்பட்டபோது, அவர் மீதி நிறவெறி கருத்துக்களை அவர்கள் பகிர்ந்திருந்தனர். 'அவர் பிரெஞ்சு பெண் அல்ல. பிரெஞ்சு நிறமும் அல்ல. இது பரிஸ். பமாகோ சந்தை அல்ல' போன்ற கருத்துக்களை அவர்கள் வெளியிட்டிருந்தனர். தீவிர வலதுசாரி அமைப்பான "Les Natifs"இனைச் சேர்ந்தவர்களே இந்த கருத்துக்களை வெளியிட்டிருந்தனர்.
அதை அடுத்து அவர்கள் மீது பரிஸ் வழக்கறிஞர் அலுவலகம் வழக்கு தொடுத்திருந்தது. அதன் நீதிமன்ற விசாரணைகள் விரைவில் இடம்பெறும் என தெரிவிக்கப்படுகிறது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1