நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி!!
6 மாசி 2025 வியாழன் 07:00 | பார்வைகள் : 6626
பிரதமர் பிரான்சுவா பெய்ரூவின் அரசாங்கம் மீது கொண்டுவந்த நம்பிக்கை இல்லா பிரேரணை தோல்வியில் முடிந்தது.
வரவு செலவுத் திட்டத்தினை நிறைவேற்றும் முனைப்பில் இருக்கும் பெய்ரூ, அதன் ஒவ்வொரு பகுதிகளையும் நிறைவேற்ற 49.3 எனும் அரசியலமைப்பு சட்டத்தை பயன்படுத்தி வருகிறார். அதை அடுத்து அவரது அரசாங்கம் மீது இந்த வார திங்கட்கிழமை La France Insoumise கட்சியினர் இரண்டு நம்பிக்கை இல்லா பிரேரணையை கொண்டுவந்தனர்.
அதற்கான வாக்கெடுப்பு நேற்று பெப்ரவரி 5, புதன்கிழமை மாலை பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. அரசாங்கத்தை கவிழ்க்க 289 வாக்குகள் தேவை எனும் நிலையில், 122 வாக்குகள் மட்டுமே பதிவாகியிருந்தன. இதனால் முதலாவது நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வியடைந்தது.
பின்னர் இரண்டாவது பிரேரணைக்கான வாக்கெடுப்பு சில நிமிடங்களில் மீண்டும் இடம்பெற்றது. மீண்டும் அதே 122 வாக்குகள் மாத்திரமே பதிவாகியிருந்தன.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் நாகேஸ்வரன் மகேஸ்வரி
பிரான்ஸ், யாழ் புங்குடுதீவு
வயது : 69
இறப்பு : 29 Nov 2025
-
3






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan