பாடசாலை மாணவனுக்கு கத்தித்துக்கு தாக்குதல்!!
5 மாசி 2025 புதன் 06:35 | பார்வைகள் : 8153
17 வயதுடைய மாணவன் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ளார். Bagneux (Hauts-de-Seine) நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அங்குள்ள Saint-Gabriel உயர்கல்வி பாடசாலையில் பயிலும் 17 வயதுடைய உயர்கல்வி மாணவன் ஒருவர், நேற்று பெப்ரவரி 4, செவ்வாய்க்கிழமை தாக்கப்பட்டார். அதே வயதுடைய ஒருவர் கத்தியால் இத்தாக்குதலை மேற்கொண்டதாகவும், இதில் மாணவன் படுகாயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதல் மேற்கொண்ட நபர் தப்பி ஓடியுள்ள நிலையில், மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மாணவன் உயிருக்கு போராடி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதலை அடுத்து பாடசாலையில், உளநல சிகிச்சை மையம் ஒன்று அமைக்கப்பட்டு மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan