Paristamil Navigation Paristamil advert login

ஈஃபிள் கோபுரத்தில் மீண்டும் சேவைக்கு வந்த மின் தூக்கி!

ஈஃபிள் கோபுரத்தில் மீண்டும் சேவைக்கு வந்த மின் தூக்கி!

30 தை 2025 வியாழன் 19:00 | பார்வைகள் : 3635


கடந்த ஐந்து ஆண்டுகளாக திருத்தப்பணியில் இருந்த ஈஃபிள் கோபுரத்தில் வடக்கு பகுதி மின் தூக்கி (l'ascenseur) தற்போது மீண்டும் சேவைகளுக்கு வந்துள்ளன.

1965 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த மின் தூக்கி, காலத்தின் கட்டாயமாக நவீனமயமாக்கப்படவேண்டிய தேவைக்குள்ளானது. அதை அடுத்து திருத்தப்பணிகள் இடம்பெற்றது. தற்போது நவீனமயமாக்கப்பட்டு, அதிக வேகமாகவும், அதிக பாரத்தினை தூக்கும் திறனுடனும் அமைக்கப்பட்டுள்ளது.

இன்று ஜனவரி 29, வியாழக்கிழமை குறித்த மின் தூக்கி திறந்து வைக்கப்பட்டது. ஒரே தடவையில் 90 பேரைச் சுமந்துகொண்டு நாள் ஒன்றுக்கு 130 தடவைகள் மின் தூக்கி பயணிக்கும் திறன் கொண்டது எனவும், ஆண்டுக்கு 3.2 மில்லியன் பேரை ஏற்றி இறக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை, முந்தைய மின் தூக்கியோடு ஒப்பிடுகையில் 20% சதவீதம் மின்சாரத்தையும் குறைக்கும் திறன் கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்