கனடாவில் பேஸ்ட்ரி உணவு வகைகள் தொடர்பில் எச்சரிக்கை
30 தை 2025 வியாழன் 11:57 | பார்வைகள் : 5369
கனடாவில் பேஸ்ட்ரி உணவு வகைகள் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக இறக்குமதி செய்யப்படும் பேஷ்ட்ரி வகைகளில் சல்மான் லா என்னும் பாக்டீரியா தாக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கனடிய பொது சுகாதார முகவர் நிறுவனம் இது தொடர்பான எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இந்த பேஸ்ட்ரீ வகைகளை உட்கொண்ட 69 பேர் நோய்வாய்ப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனவே இந்த வகை பேஸ்ட்ரிகளை சந்தைகளில் இருந்து மீள பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் கடந்த 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் இந்த ஆண்டு ஜனவரி மாதம் வரையில் இந்த பேஸ்ட்ரி வகைகளை உட்கொண்ட 69 பேர் நோய்வாய் பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இவர்களில் 22 பேர் வைத்தியசாலையில் அனுமதி பெற்று சிகிச்சை பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
அதிக எண்ணிக்கையிலானவர்கள் க்யூபிக் மாகாணத்தில் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.

























Bons Plans
Annuaire
Scan