லியோன் நகர மெற்றோவில் கத்திக்குத்து! - ஒருவர் கைது!!
30 தை 2025 வியாழன் 08:37 | பார்வைகள் : 20147
லியோன் (Lyon) நகர மெற்றோ தொடருந்து ஒன்றில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதல் ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜனவரி 26, ஞாயிற்றுக்கிழமை இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது. தாக்குதலாளி தப்பிச் சென்ற நிலையில், நேற்று ஜனவரி 29, புதன்கிழமை அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இரு நபர்களுக்கிடையே வாக்குவாதம் எழுந்து, பின்னர் அது கத்திக்குத்தில் முடிந்ததாகவும், 7 தொடக்கம் 8 செ.மீ நீளமுடைய கத்தி ஒன்றினால் கழுத்தி தாக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதலுக்கு இலக்கான நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடிய தாக்குதலாளி, இரு நாட்களின் பின்னர் நேற்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
விளம்பரங்கள்
Architecte
Je propose mes services pour :
Maison, dossier pour






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire