காவல்துறையினரிடம் இருந்து தப்பிச் சென்ற ஒருவர் சென் நதிக்குள் பாய்ந்து - மாயம்!
30 தை 2025 வியாழன் 07:00 | பார்வைகள் : 8498
காவல்துறையினரிடம் இருந்து தப்புவதற்காக சென் நதிக்குள் பாய்ந்த ஒருவர் காணாமல் போயுள்ளார். பரிசில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஜனவரி 28 , செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 1 மணி அளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 4 ஆம் வட்டாரத்தில் வீதி கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர். திருட்டு ஒன்றில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவரை கைது செய்ய முற்பட்டனர்.
காவல்துறையினரிடம் இருந்து தப்பிக்க, அங்கிருந்து ஓடிச்சென்றுள்ளார். அவரை காவல்துறையினர் துரத்திச் சென்றபோது, சென் நதிக்குள் குதித்துள்ளார்.
அவரை மீட்பதற்காக காவல்துறையினர் நதிக்குள் பாய்து தேடினர். ஆனால் அவரை மீட்கமுடியவில்லை. தீயணைப்பு படையினரும் அழைக்கப்பட்டு தேடப்பட்டது. ஆனால் குறித்த நபரைக் கண்டுபிடிக்க முடியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
விளம்பரங்கள்
Architecte
Je propose mes services pour :
Maison, dossier pour






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire