இலங்கையில் பட்டதாரி காதலியை கழுத்தறுத்து கொன்ற காதலன்
29 தை 2025 புதன் 15:40 | பார்வைகள் : 10777
ஒரே பல்கலைக்கழகத்தில் படிக்கும் காலத்திலிருந்தே காதலித்து வந்த தனது பட்டதாரி காதலியின் கழுத்தை அறுத்த காதலனும் விஷம் குடித்ததாக இரத்தினபுரி எலபத்த பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இரத்தினபுரி, எலபத பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெல்லபட கரங்கொட பகுதியில் உள்ள அவரது வீட்டில், புதன்கிழமை (29) காலை 29 வயதான பட்டதாரி கழுத்து அறுத்து கொல்லப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இரத்தினபுரி, எலபத, தெல்லபட பகுதியைச் சேர்ந்த சந்திமா ஹர்ஷனி குணரத்ன என்ற 29 வயது இளம் பெண்ணும், களனி பல்கலைக்கழக மாணவியுமான ஒருவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
அவள் இரத்தினபுரி நகரில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தாள்.


























Bons Plans
Annuaire
Scan