மனித மலத்திலுள்ள பாக்டீரியாவிலிருந்து மருந்து - சுவிட்சர்லாந்தில் கண்டுபிடிப்பு
29 தை 2025 புதன் 15:01 | பார்வைகள் : 8359
சுவிஸ் மருத்துவமனை ஒன்று, மனித மலத்திலுள்ள பாக்டீரியாவிலிருந்து மருந்து தயாரிக்க அதிகாரப்பூர்வமாக அனுமதி பெற்றுள்ளது.
சுவிட்சர்லாந்தில் லாசேன் நகரில், கடுமையான குடல் பாதிப்புடையவர்களுக்கு, மனித மலத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட பாக்டீரியாவிலிருந்து தயாரிக்கப்பட்ட மாத்திரைகள் மூலம் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், Vaud பல்கலை மருத்துவமனை, மனித மலத்திலுள்ள பாக்டீரியாவிலிருந்து மருந்து தயாரிக்க அதிகாரப்பூர்வமாக அனுமதி பெற்றுள்ளது.
வெறுமனே ஆன்டிபயாட்டிக்குகள் மூலம் அளிக்கப்படும் சிகிச்சையைவிட, இந்த மனித மலத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட பாக்டீரியாவிலிருந்து தயாரிக்கப்பட்ட மாத்திரைகள் மூலம் அளிக்கப்படும் சிகிச்சை, 95 சதவிகித பலனைக் கொடுப்பதாக Vaud பல்கலை மருத்துவமனை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan