‘மங்காத்தா 2’…. தள்ளிப்போக என்ன காரணம்?
28 தை 2025 செவ்வாய் 13:53 | பார்வைகள் : 7699
நடிகர் சிவகார்த்திகேயன் அமரன் படத்திற்கு பிறகு SK 23, SK 25 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மேலும் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் தனது 24வது படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார் சிவகார்த்திகேயன். இதற்கிடையில் இவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க போவதாக செய்திகள் வெளியானது. ஆனால் சிவகார்த்திகேயன் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பிஸியாக இருப்பதால் இயக்குனர் வெங்கட் பிரபுவிற்கு இன்னும் இரண்டு வருடங்கள் கழித்து தான் கால்ஷீட் தருவதாக சொல்லிவிட்டாராம்.
இயக்குனர் வெங்கட் பிரபு கடைசியாக விஜய் நடிப்பில் கோட் படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் வெங்கட் பிரபு அடுத்ததாக என்ன படம் இயக்கப் போகிறார் என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. இதற்கிடையில் வெங்கட் பிரபு, அஜித்தை சந்தித்து பேசியிருந்தார். இது தொடர்பான புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வந்தது.
எனவே அஜித், வெங்கட் பிரபு கூட்டணியில் மங்காத்தா 2 திரைப்படம் உருவாகப் போகிறது என சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியானது கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான மங்காத்தா திரைப்படம் இமாலய வெற்றி பெற்ற நிலையில் இதன் இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது.
ஆனால் தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படத்தை முடித்த பின்னர்தான் மங்காத்தா 2 படத்தை கையில் எடுப்பார் என்று சொல்லப்படுகிறது. எனவே சிவகார்த்திகேயன் இரண்டு வருடங்கள் கழித்து தான் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க உள்ள நிலையில் மங்காத்தா 2 திரைப்படமும் தள்ளிப்போகிறது. இந்த தகவல் ரசிகர்களுக்கு சற்று அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.--
🔥 இன்றைய சிறப்பு சலுகை
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Ajouter
Annuaire
Scan