யாழில் இயேசுவின் சிலுவையில் இருந்து கசிந்த நீர் - ஆச்சர்யத்தில் மக்கள்!
28 தை 2025 செவ்வாய் 11:03 | பார்வைகள் : 12969
யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் காணப்படும் இயேசுவின் சிலுவையில் இருந்து இன்று நீர் கசிந்த சம்பவம் பிரதேசவாசிகளை ஆச்சர்யத்திகுள்ளாக்கியுள்ளது.
சுமார் மூன்று மணித்தியாலங்களுக்கு மேலாக இயேசுவின் விரல் பகுதியில் இருந்து நீர் கசிந்துள்ளதாக கூறப்படுகின்றது.
சம்பவம் அறிந்து பல்வேறு இடங்களில் இருந்து வருகை தந்த மக்கள் இயேசுவின் காலில் இருந்து வடிந்தோடிய நீரை எடுத்துச் சென்றுள்ளனர்.
சகோதர மதத்தினர் மற்றும் இராணுவத்தினர், பொலிசார், பொது மக்கள் என பலர் இந்த காட்சியை பார்வையிட்டதோடு மட்டுமன்றி புகைப்படங்களையும் எடுத்துச் சென்றதாகவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில் தேவாலய பங்குத்தந்தையால் உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே மேலதிக தகவல்களை வெளியிட முடியுமென நிர்வாகத்தினர் தெரிவித்ததாகவும் கூறப்படுகின்றது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan