வெள்ளம் : மூன்று மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை.. வெளியேற்றம். போக்குவரத்து பாதிப்பு!!

28 தை 2025 செவ்வாய் 08:45 | பார்வைகள் : 5930
வெள்ள அனர்த்தம் காரணமாக மூன்று மாவட்டங்களுக்கு அதிகபட்சமான ‘சிவப்பு’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Morbihan, Loire-Atlantique மற்றும் Ille-et-Vilaine ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு ‘சிவப்பு’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Orne, Calvados, Mayenne மற்றும் Maine-et-Loire ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வெள்ளம் காரணமாக தொடருந்து போக்குவரத்துக்கள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக Redon முதல் Rennes வரையும், Rennes முதல் Saint-Malo வரையும் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
Brittany இல் நேற்று இரவு முதல் இதுவரை 400 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தீயணைப்பு படை வீரர்கள் மீட்புப்பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025