Paristamil Navigation Paristamil advert login

பரிஸ் : பூங்கா, புல்வெளி, கல்லறைகள் மூடப்படுகின்றன!!

பரிஸ் : பூங்கா, புல்வெளி, கல்லறைகள் மூடப்படுகின்றன!!

27 தை 2025 திங்கள் 15:27 | பார்வைகள் : 5935


புயல் காற்று எச்சரிக்கை விடுக்கப்பட்டதை அடுத்து, பரிசில் உள்ள பூங்காக்கள், கல்லறைகள், புல்வெளிப்பகுதிகள் அனைத்தும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தலைநகர் பரிஸ் உட்பட இல்-து-பிரான்சின் அனைத்து மாவட்டங்களுக்கும் புயல் காரணமாக ‘மஞ்சள்’ நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மணிக்கு 60 கி.மீ தொடக்கம் 90 கி.மீ வரை வேகமான காற்று வீசும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

அதை அடுத்து, முன்னெச்சரிக்கை காரணமாக அவை மூடப்படுவதாக பரிஸ் நகரசபை அறிவித்துள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்