இயக்குனராகும் 'லப்பர் பந்து' நாயகி..
27 தை 2025 திங்கள் 14:16 | பார்வைகள் : 4241
‘லப்பர் பந்து’ படத்தில் நாயகியாக நடித்த நடிகை இயக்குனராக இருப்பதாகவும், அவரது முதல் படத்தில் பிரபல ஹீரோ ஒருவர் நாயகனாக நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.
ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் ஆகிய இருவரும் நடித்த ‘லப்பர் பந்து’ என்ற திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும், இந்த படம் வசூலிலும் சக்கை போட்டு போட்டது என்பது தெரிந்தது.
இந்த நிலையில், இந்த படத்தின் நாயகி ஆக சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி என்பவர் நடித்திருந்தார். இவரது நடிப்புக்கு பாராட்டுக்கள் குவிந்தது என்பதும் தெரிந்தது. ஏற்கனவே ‘வதந்தி’ என்ற வெப் தொடரில் நடித்திருந்தார் என்பதும், தற்போது அவர் கமல்ஹாசன் நடிப்பில், மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் ’தக்லைஃப் என்ற திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணி புரிவதோடு, அந்த படத்தில் ஒரு கேரக்டரில் சஞ்சனா நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், கடந்த இரண்டு வருடங்களாக ஒரு கதையை எழுதி, அந்த கதைக்கான நாயகனே தேடிவந்த நிலையில், கவினிடம் அவர் சொன்ன கதை ஒர்கவுட் ஆகிவிட்டதாகவும், இதனை அடுத்து கவின் நடிக்கும் 9வது படத்தை சஞ்சனா இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. சஞ்சனா இயக்கத்தில் கவின் நடிப்பில் உருவாகும் படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Coupons
Annuaire
Scan