Paristamil Navigation Paristamil advert login

இந்த வாரம் முழுவதும் தொடரும் மழை!!

இந்த வாரம் முழுவதும் தொடரும் மழை!!

27 தை 2025 திங்கள் 07:00 | பார்வைகள் : 3467


கடந்த சில நாட்களாக பெய்துவரும் மழை, இந்த வாரம் முழுவதும் தொடரும் என வானிலை அவதானிப்பு மையம் அறிவித்துள்ளது.

Herminia புயலின் தாக்கம் இன்று திங்கட்கிழமையும் சில மாவட்டங்களில் இருக்கும் எனவும், இன்று பல மாவட்டங்களுக்கு வெள்ள அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை நாட்டின் அனைத்து இடங்களிலும் பரவலாக மழை பதிவாகியிருந்தது.

(இன்றைய காலநிலை)



இந்நிலையில், இன்று திங்கட்கிழமை முதல் இவ்வார இறுதி வரை தொடரும் எனவும், வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஓரளவு வெப்பம் நிலவும் எனவும் அடுத்த வாரம் முதல் நாடு முழுவதும் வெயில் நிலவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(வரும் ஞாயிற்றுக்கிழமைக்கான காலநிலை)
 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்