Paristamil Navigation Paristamil advert login

அறுபது வருட திருமண வாழ்க்கை துப்பாக்கிச்சூட்டில் முடிந்தது... கணவர் தற்கொலைக்கு முயற்சி!!

அறுபது வருட திருமண வாழ்க்கை துப்பாக்கிச்சூட்டில் முடிந்தது... கணவர் தற்கொலைக்கு முயற்சி!!

3 பங்குனி 2025 திங்கள் 19:00 | பார்வைகள் : 4096


மனைவியை சுட்டுக்கொன்ற ஒருவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இச்சம்பவம் Changis-sur-Marne (Seine-et-Marne) நகரில் இடம்பெற்றுள்ளது.

79 வயதுடைய பெண்மணி ஒருவரே துப்பாக்கியால் சுடப்படுள்ளார். படுகாயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே பலியானார். அவரை சுட்டுக்கொன்றுவிட்டு அவரது 86 வயதுடைய கணவர் தற்கொலைக்கு முயன்ற வேளையில் அவர் கைது செய்யப்பட்டார். அவர்கள் இருவரும் திருமணமாகி 60 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவம் கடந்த பெப்ரவரி 28, வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது. மறுநாள் சனிக்கிழமை Choisy-le-Roi (Val-de-Marne) நகரில் பெண் ஒருவர் அவரது கணவரால் கத்திக்குத்துக்கு இலக்காகி கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்