மகளிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அடுத்தடுத்து தோல்வி

3 பங்குனி 2025 திங்கள் 12:02 | பார்வைகள் : 2344
மகளிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியிடம் தோல்வியுற்றது.
பெங்களுருவில் நேற்று நடந்த மகளிர் பிரீமியர் லீக் போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதின.
முதலில் களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் ஸ்மிருதி மந்தனா 8 ஓட்டங்களில் அவுட் ஆனார்.
பின்னர் வந்த வையட் ஹாட்ஜ் 21 (18) ஓட்டங்கள் எடுத்து வெளியேற, எல்லிஸ் பெர்ரி அதிரடியில் மிரட்டினார்.
ராக்வி பிஸ்ட் 32 பந்துகளில் 2 சிக்ஸர்களுடன் 33 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்க, கடைசிவரை களத்தில் நின்ற எல்லிஸ் பெர்ரி (Ellyse Perry) 47 பந்துகளில் 3 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 60 ஓட்டங்கள் எடுத்தார்.
இதன்மூலம் பெங்களூரு அணி 5 விக்கெட்டுக்கு 147 ஓட்டங்கள் எடுத்தது. சாரணி, ஷிகா தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
அடுத்து களமிறங்கிய டெல்லி கேபிட்டல்ஸ் 1 விக்கெட்டுக்கு 151 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
ஷஃபாலி வெர்மா (Shafali Verma) 43 பந்துகளில் 4 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 80 ஓட்டங்களும், ஜெஸ் ஜோனஸன் 38 பந்துகளில் 1 சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 61 ஓட்டங்களும் குவித்தனர்.
நடப்பு தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருயின் தொடர்ச்சியான 4வது தோல்வி இதுவாகும்.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1