சிம்புவின் அடுத்த படத்தில் சந்தானம்..
2 பங்குனி 2025 ஞாயிறு 13:20 | பார்வைகள் : 9278
சிம்பு நடிக்கும் 49ஆவது படம் குறித்த அறிவிப்பு, அவரது பிறந்த நாளின் போது வெளியானது. இந்நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விட்டதாகவும், இந்த படத்தில் சந்தானம் இணைந்து உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சிம்புவின் பிறந்த நாளன்று, அவரது 49வது, 50வது மற்றும் 51வது படங்கள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது என்பதை ஏற்கனவே பார்த்தோம். குறிப்பாக, சிம்பு 49 படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. இவர் ஏற்கனவே ’பார்க்கிங்’ என்ற வெற்றி படத்தை இயக்கிய நிலையில், இவரது இரண்டாவது படமே சிம்புவின் படமாக அமைந்ததற்கு வாழ்த்துக்கள் குவிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. மேலும், இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில், தற்போது படப்பிடிப்பு தொடங்கி விட்டதாகவும், இதில் சந்தானம் இணைந்து உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சந்தானம் கடந்த சில ஆண்டுகளாக ஹீரோவாக மட்டுமே நடித்து வருகிறார். இதனால், சிம்புவின் படத்தில் அவர் எந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு இராஜேந்திரம் சரவணபவானந்தன்
Crégy-lès-Meaux, France, மாதகல் மேற்கு - Sri Lanka
வயது : 75
இறப்பு : 11 Feb 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan