covoiturage சாலை என்றால் என்ன..? - திங்கட்கிழமை முதல் பயன்பாட்டுக்கு வருகிறது!!

1 பங்குனி 2025 சனி 15:00 | பார்வைகள் : 4187
மார்ச் 3 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் சுற்றுவட்ட வீதியில் “covoiturage சாலை” எனும் ஒரு பகுதி ஒதுக்கப்பட உள்ளது. இந்த பகுதி யாருக்கு..??
ஒலிம்பிக் போட்டிகள் இடம்பெற்ற போது, ‘ஒலிம்பிக் வீதி’ என சாலையின் ஒரு பகுதி ஒதுக்கப்பட்டிருந்தது அனைவரும் அறிந்ததே. அதே போன்று தற்போது ஒரு சில பகுதிகள் covoiturage சாலை என குறிப்பிடப்பட்டு, ஒதுக்கப்பட்டுள்ளது. மகிழுந்துகளில் தனியே பயணிப்போர்கள், மேலும் சில பயணிகளை ஏற்றிக்கொண்டு பயணிக்கும் ‘கார்பூலிங்’ முறைய பின்பற்றினால், அவர்களுக்கான விசேட சலுகையே இந்த covoiturage சாலையாகும்.
குறித்த வீதியில் covoiturage மகிழுந்துகள் மற்றும் VTC வாடகை மகிழுந்துகள் மட்டுமே பயணிக்க முடியும். இதனால் மிக வேகமாக இலக்கை சென்றடைய முடியும் என தெரிவிக்கப்படுகிறது.
முதற்கட்டமாக சுற்றுவட்ட வீதியின் (périphérique) ஒரு பகுதி A1 மற்றும் A13 நெடுஞ்சாலைகளின் ஒரு பகுதியில் இவை திங்கட்கிழமை முதல் நடைமுறைக்கு வருகிறது.
2030 ஆம் ஆண்டளவில் பரிசில் 900,000 பேர் covoiturage முறையை பயன்படுத்துவார்கள் என தெரிவிக்கப்படுகிறது. இந்த covoiturage வசதி மூலம் சுற்றுச்சூழல் மாசடைவு, எரிபொருள் , நேரவிரயம் போன்றவற்றை தடுக்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது.