பழுதடைந்த ஒலிம்பிக் பதக்கங்கள் மாற்றப்படுகின்றன!!
1 பங்குனி 2025 சனி 09:00 | பார்வைகள் : 5668
பரிஸ் ஒலிம்பிக் போட்டிகளின் போது வழங்கப்பட்ட பதக்கங்கள் சேதமடைந்திருந்தமை அறிந்ததே. அதற்கு மாற்று பதக்கங்கள் வழங்கும் பணி இன்று மார்ச் 1 ஆம் திகதி ஆரம்பித்துள்ளது.
பல்வேறு மெய்வல்லுனர்களுக்கு வழங்கப்பட்ட பதக்கங்கள் சேதமடைந்துள்ளன. மொத்தமாக 220 பதக்கங்களை ஒலிம்பிக் குழு மாற்றித்தருவதாக உறுதியளித்திருந்தது. மொத்தமாக தயாரிக்கப்பட்ட 5,084 மெடல்களில் 4% சதவீதமானவை சேதமடைந்துள்ளது. ஒவ்வொரு பதக்கத்திலும் ஈஃபிள் கோபுரத்தில் இருந்து எடுக்கப்பட்ட இரும்பின் ஒரு பகுதி சேர்க்கப்பட்டுள்ளது.

85 mm விட்டமும், 9.5 mm தடிப்பும் கொண்ட இந்த பதக்கம் மூன்று விதமான நிறையினைக் கொண்டது. தங்கப்பதக்கம் 529 கிராம் எடையும், வெள்ளிப்பதக்கம் 525 கிராமும், வெண்கலப்பதக்கம் 455 கிராம் எடையும் கொண்டதாகும்.
அப்பதக்கங்களில் நிறப்பூச்சு சேதமடைந்து பழுதடைந்து காணப்படுவதாகவும், அவற்றுக்குப் பதிலாக புதிய பதக்கங்கள் வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

🔥 இன்றைய சிறப்பு சலுகை
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
18 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan