● புதிய மாதம்.. புதிய மாற்றங்கள்!!

1 பங்குனி 2025 சனி 07:00 | பார்வைகள் : 10862
இன்று மார்ச் 1. இந்த புதிய மாதத்தில் பல்வேறு புதிய மாற்றங்கள் நடைமுறைக்கு வருகின்றன. அவற்றைத் தொகுக்கிறது இந்த பதிவு.
■ RSA
கொடுப்பனவுகள் எந்த மாற்றமும் கொண்டுவரப்படவில்லை. மாறாக இன்று முதல் நிர்வாக நடைமுறைகளை எளிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
■ taxe Chirac
விமான பயணங்களுக்காக அறவிடப்பட்டும் ‘ taxe Chirac’ எனும் வரி இன்று மார்ச் 1 முதல் அதிகரிக்கப்படுகிறது. இதுவரை 2.63 யூரோக்களாக இருந்த வரி, இன்று முதல் 7.40 யூரோக்களாக அதிகரிக்கப்படுகிறதூ. இந்த வரியானது classe économique பயணங்களுக்கு மட்டும் பொருந்தும்.
■ Malus écologique
மாசடைவை வெளியிடும் வாகனங்களுக்கு அறவிடப்படும் CO2 வரியில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. 118g/km எனும் அளவைக் கொண்டுள்ள வாகனங்களுக்கு அறவிடப்பட்ட CO2 வரியானது, தற்போது 113g/km வரை குறைக்கப்பட்டுள்ளது. அதிக மாசடவைவை வாகனங்கள் வெளியிட்டால் அதிக வரி அறவிடப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
■ Carte grise
வாகனப் பதிவுகளுக்கான (Certificat d'Immatriculation) கட்டணங்கள் மார்ச் 1, இன்று முதல் அதிகரித்துள்ளன. 36.20 யூரோக்களாக இருந்த இந்த கட்டணம் இன்று முதல் 42 யூரோக்களாக அதிகரித்துள்ளது.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025
-
1