விவசாயக் கண்காட்சியில் இருந்து €30,000 யூரோக்கள் மதிப்புள்ள நாய்கள் திருட்டு!!
27 மாசி 2025 வியாழன் 16:00 | பார்வைகள் : 6375
பரிசில் இடம்பெற்று வரும் விவசாயக் கண்காட்சியில் இருந்து விலையுயர்ந்த மூன்று நாய்கள் திருடப்பட்டுள்ளன.
Eure-et-Loir மாவட்டத்தைச் சேர்ந்த நாய் விற்பனையாளர் ஒருவர் குறித்த கண்காட்சியில் காட்சிப்படுத்த வைத்திருந்த நாய்களே திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Texane, German Shepherd ஆகிய இரு இன நாய்களே திருடப்பட்டுள்ளதாகவும், அதன் மதிப்பு €30,000 யூரோக்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
பரிஸ் 15 ஆம் வட்டார காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதை அடுத்து இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
பெப்ரவரி 25, செவ்வாய்க்கிழமை அவை காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Ajouter
Annuaire
Scan