Paristamil Navigation Paristamil advert login

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 65 பேர்

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 65 பேர்

27 மாசி 2025 வியாழன் 11:38 | பார்வைகள் : 3319


அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய மேலும் 65 பேர் மத்திய அமெரிக்க நாடான கோஸ்டாரிகாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவின் எல்லை வழியே அண்டை நாடுகளான மெக்சிகோ, கனடா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் சட்டவிரோத வகையில் அந்நாட்டுக்குள் புலம்பெயர்ந்து வருகின்றனர்.

இதுபோன்ற சட்டவிரோத குடியேறிகளுக்கு எதிராக அமெரிக்காவின் 47-வது அதிபராக பதவியேற்றுள்ள டொனால்டு டிரம்ப் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

இதனிடையே, அமெரிக்காவிலிருந்து அனுப்பி வைக்கப்படும் சட்டவிரோத குடியேறிகளை தற்காலிக முகாம்களில் தங்க வைக்க மத்திய அமெரிக்க நாடான கோஸ்டாரிகா ஒப்புக்கொண்டது.

அதன்படி, அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 16 சிறார்கள் உட்பட 65 பேர், விமானம் மூலம் கோஸ்டாரிகா நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் தற்காலிக குடியேறும் மையங்களுக்கு பேருந்துகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்