பாலியல் வல்லுறவு : காப்பகம் ஒன்றின் ஊழியர் கைது!!
26 மாசி 2025 புதன் 14:21 | பார்வைகள் : 13181
பரிசில் உள்ள முதியோர் காப்பகம் ஒன்றில் சமையல் பணியில் ஈடுபடும் ஒருவர் பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
உடல்நலம் குறைந்த முதியோர் ஒருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக குறித்த நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. அதை அடுத்து பரிஸ் வழக்கறிஞர் அலுவலகம் விசாரணைகளை மேற்கொண்டதில் குறித்த நபரை பரிஸ் காவல்துறையினர் கைது செய்தனர்.
1975 ஆம் ஆண்டில் பிறந்த பரிசில் வசிக்கும் ஒருவரே கைது செய்யப்பட்டதாகவும், விரைவில் அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan