Paristamil Navigation Paristamil advert login

Internet இல்லாமலேயே Youtube வீடியோக்களை பார்ப்பது எப்படி…?

Internet இல்லாமலேயே Youtube வீடியோக்களை பார்ப்பது எப்படி…?

25 மாசி 2025 செவ்வாய் 09:12 | பார்வைகள் : 2311


Youtube  வீடியோ பொழுதுபோக்குக்கு ஒரு சிறந்த தேர்வாகக் கருதப்படுகிறது. திரைப்படங்கள் முதல்  தொலைக்காட்சி தொடர்கள் வரை அனைத்தையும் Youtube-இல் இலவசமாகப் பார்க்கலாம்.

Youtube அதன் பயனர்களுக்காக புதிய அம்சங்களையும் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.

இந்த டிஜிட்டல் யுகத்தில், இணையம் இல்லாமல் வாழ்வது பெரும்பாலான மக்களுக்கு கடினமான பணியாகும்.

ஆனால் இணையம் இல்லாவிட்டாலும் Youtube-இல் வீடியோக்களை பார்க்கலாம்.

இதற்கு நீங்கள் எந்தப் பணமும் செலுத்த வேண்டியதில்லை. அதற்கு நீங்கள் என்ன செய்யலாம் என இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.  

YouTube இலிருந்து வீடியோவைப் பதிவிறக்கம் செய்தால், இலகுவாக பார்க்கலாம். நீங்கள் எளிதாக வீடியோவை பதிவிறக்கம் செய்து Offline-இல் பார்க்கலாம்.  

உங்கள் இணைய இணைப்பு தீர்ந்துவிட்டாலோ அல்லது நெட்வொர்க் பிரச்சனை உள்ள இடத்தில் இருந்தாலோ, நீங்கள் ஏற்கனவே பதிவிறக்கம் செய்த வீடியோக்களை எளிதாகப் பார்க்கலாம்.

நீங்கள் யூடியூப்பில் ஒரு வீடியோவைப் பார்த்தவுடன், கீழே பதிவிறக்க விருப்பத்தைப் பார்ப்பீர்கள். அங்கு உங்கள் ஸ்மார்ட்போனுடன் அதைத் தொடுவதன் மூலம் வீடியோவை எளிதாக பதிவிறக்கம் செய்யலாம்.

சில வீடியோக்களைப் பதிவிறக்க நீங்கள் YouTube பிரீமியத்திற்கு குழுசேர வேண்டியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.   

 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்