Mulhouse தாக்குதல் : யார் இந்த கொலையாளி??
23 மாசி 2025 ஞாயிறு 07:00 | பார்வைகள் : 12354
நேற்று பெப்ரவரி 22, சனிக்கிழமை பிற்பகல் Mulhouse நகரில் உள்ள சந்தைப்பகுதி ஒன்றில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் இருவர் காயமடைந்திருந்தனர். தாக்குதல் தொடர்பில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
தாக்குதல் சம்பவம் பிற்பகல் 3.43 மணிக்கு இடம்பெற்றுள்ளது. ஆயுததாரி கூரான கத்தி ஒன்றின் மூலம் சந்தையில் நின்றிருந்த நபர்களை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார்.
கொல்லப்பட்ட நபர் 69 வயதுடைய போர்ச்சுக்கல் நாட்டவர் என தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதலின் போது 'அல்லா அக்பர்' என கோஷமிட்டுள்ளார்.
தாக்குதலாளில் 1987 ஆம் ஆண்டு ஏப்ரலில் பிறந்த அல்ஜீரிய அகதி எனவும், Brahim A என்பது அவரது பெயர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் அவருக்கு வதிவிட உரிமை மறுக்கப்பட்டுள்ளதுடன் OQTF எனப்படும் 'நாட்டை விட்டு வெளியேற வேண்டும்' எனும் ஆணையும் பிறப்பிக்கப்பட்டவர் என தெரிவிக்கப்படுகிறது.
அத்தோடு 2014 ஆம் ஆண்டு அவர் சட்டவிரோதமாக நாட்டுக்குள் நுழைந்தவர் எனவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தாக்குதலின் பின்னர், காவல்துறையினரால் அவர் மடக்கிப் பிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். அதன் போது மூன்று காவல்துறையினர் காயமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. கொலையாளியும் காயமடைந்துள்ளார்.
காயமடைந்த காவல்துறையினரில் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த கொலையாளி முன்னதாக 90 நாட்கள் சிறைத்தண்டனை அனுபவித்து, சென்ற வருடம் ஜூன் மாதத்திலேயே விடுதலையாகியிருந்தார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
தேசிய பயங்கரவாத தடுப்பு பிரிவினருக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டுள்ளது. அவர்கள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
2 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan