இயக்குனர் ஷங்கரின் சொத்துக்கள் முடக்கம்.

21 மாசி 2025 வெள்ளி 07:42 | பார்வைகள் : 4007
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான ஷங்கரின் கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்துக்கள், அமலாக்கத்துறை நடவடிக்கையால் முடக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து அமலாக்கத்துறை தரப்பில் கூறிய போது, ’இயக்குனர் ஷங்கருக்கு சொந்தமான அசையா சொத்துகளில் மூன்று முடக்கப்பட்டு இருப்பதாகவும், இவற்றின் மதிப்பு 10.11 கோடி ரூபாய் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. PMLA 2002 சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமலாக்கத்துறை விளக்கம் அளித்துள்ளது.
கடந்த 2010 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடித்த "எந்திரன்" திரைப்படத்தின் கதை, 1996 ஆம் ஆண்டு அரூர் தமிழ்நாடன் எழுதிய கதையை தழுவி எடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்த நிலையில், அமலாக்கத்துறை பண முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
அதன் அடிப்படையில், இயக்குனர் ஷங்கரின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. இதனால் திரையுலகிலும், ரசிகர்களிடமும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1