Paristamil Navigation Paristamil advert login

சட்டவிரோதமாக குடியேற நினைப்போரின் நிலைமை - வெள்ளை மாளிகை எச்சரிக்கை

சட்டவிரோதமாக குடியேற நினைப்போரின் நிலைமை - வெள்ளை மாளிகை எச்சரிக்கை

19 மாசி 2025 புதன் 17:43 | பார்வைகள் : 5011


 சட்டவிரோதமாக குடியேற நினைத்தால் இதுதான் நிலைமை என்று புதிய வீடியோ ஒன்றை அமெரிக்க வெள்ளை மாளிகை வெளியிட்டு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களின் கைகளில் அதிகாரிகள் கைவிலங்கிட்டு, கால்களில் சங்கிலி கட்டும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இந்த வீடியோவிற்கு எலான் மஸ்க் "ஹாஹா வாவ்" என கமெண்ட் செய்துள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவி ஏற்ற பின்னர், அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கி இருப்பவர்கள் நாடு கடத்தப்படுவார்கள் என்று அறிவித்தார்.

அதன்படி சட்டவிரோதமாக தங்கி இருந்த பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்களை வெளியேற்றும் பணி நடந்து வருகிறது.

அந்த வகையில் அமெரிக்காவில் முறையான ஆவணங்கள் இன்றி வசித்து வந்த இந்தியர்கள் பலர் இந்தியாவுக்கு நடு கடத்தப்பட்டுள்ளனர்.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்