■ உக்ரேனுக்கு வலுவான பாதுகாப்பு.. - ஜனாதிபதி மக்ரோன்!!

18 மாசி 2025 செவ்வாய் 07:00 | பார்வைகள் : 5757
நேற்று பெப்ரவரி 18, திங்கட்கிழமை பரிசில் ஐரோப்பிய பாதுகாப்பு மாநாடு இடம்பெற்றது. இதில் பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் உட்பட NATO சார்பு நாடுகளின் தலைவர்கள் பலர் கலந்துகொண்டனர். இந்த சந்திப்பில் பிரதானமாக உக்ரேனின் பாதுகாப்பு குறித்து கலந்துரையாடப்பட்டது.
அதன் முடிவில் ஜனாதிபதி மக்ரோன் தெரிவிக்கையில், "உக்ரேனில் நிலையான நிரந்தரமான அமைதி ஏற்படுத்துவதை பிரான்ஸ் விரும்புகிறது. இரஷ்யா தனது ஆக்கிரமிப்பு குணத்தைக் கைவிடவேண்டும். ஐரோப்பா என்றும் உக்ரேனுக்கு துணையிருக்கும். அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் உக்ரேனியர்கள் அனைவரும் அதற்கு தயாராக இருக்கிறார்கள்!" என ஜனாதிபதி மக்ரோன் தெரிவித்தார்.
"உக்ரேனின் நிரந்தர அமைதிக்கு ஐரோப்பா என்றும் துணையிருக்கும்" எனவும் மிக அழுத்தம் திருத்தமாக குறிப்பிடார்.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
3