Paristamil Navigation Paristamil advert login

உக்ரைனில் அமைதியை நிலைநாட்ட தயார் - பிரிட்டன் பிரதமர் உறுதி

உக்ரைனில் அமைதியை நிலைநாட்ட தயார் - பிரிட்டன் பிரதமர் உறுதி

17 மாசி 2025 திங்கள் 15:20 | பார்வைகள் : 4142


உக்ரைனில் அமைதியை நிலைநாட்ட, எங்கள் படைகளை அங்கு நிறுத்தி வைப்பதற்கு தயாராக உள்ளோம்' என்று பிரிட்டன் பிரதமர் கேர் ஸ்டாமர் தெரிவித்தார்.

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து ரஷ்ய அதிபர் புடினுடன் அமைதிப் பேச்சு நடத்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் திட்டமிட்டு உள்ளார். ஐரோப்பிய நாடுகளின் பங்களிப்பின்றி அமைதிப் பேச்சு மேற்கொள்ள அமெரிக்காவும் ரஷ்யாவும் தயாராகி வருகின்றன.

இந்த பேச்சுவார்த்தை சவுதி அரேபியாவில் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு ஐரோப்பிய நாடுகளை அழைக்காதது குறித்து பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன், பிரிட்டன் பிரதமர் கேர் ஸ்டாமர் உள்ளிட்டோர் கவலை தெரிவித்துள்ளனர்.

இது குறித்து பிரிட்டன் பிரதமர் கேர் ஸ்டாமர் கூறியதாவது உக்ரைன் நாட்டின் பாதுகாப்பு என்பது, ஐரோப்பாவின் பாதுகாப்பை போன்றது.

எனவே உக்ரைனில் அமைதியை நிலை நிறுத்த, தேவைப்படும் பட்சத்தில் எங்கள் நாட்டுப் படைகளை அங்கு களம் இறக்கத் தயாராக இருக்கிறோம்.


ஒட்டுமொத்த ஐரோப்பிய நாடுகளின் படைகளும் அங்கு களம் இறக்கப் படும் பட்சத்தில், மீண்டும் ஒருமுறை உக்ரைனை தாக்குவதற்கு புடின் தயங்குவார். இவ்வாறு அவர் கூறினார்.

 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்