பரிஸ் : சிறுமி மீது பாலியல் தாக்குதல் முயற்சி... ஒருவர் கைது!!

17 மாசி 2025 திங்கள் 08:02 | பார்வைகள் : 3476
12 வயதுடைய சிறுமி ஒருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயன்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பரிஸ் 12 ஆம் வட்டாரத்தில் இச்சம்பவம் நேற்று முன்தினம் பெப்ரவரி 15, சனிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. Rue de Charenton வீதியில் வைத்து 12 வயதுடைய சிறுமி ஒருவரை கத்தி முனையில் மடக்கிப்பிடித்த நபர் ஒருவர், அச்சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயன்றுள்ளார்.
குறித்த சிறுமி தனது கைகளில் கட்டியிருந்த ஸ்மார்ட் கடிகாரம் மூலம் உடனடியாக அவரது தந்தையை அழைத்துள்ளார்.
அசம்பாவிதங்கள் எதுவும் நிகழ முன்னரே அவரது தந்தை சம்பவ இடத்தை வந்தடைந்ந்துள்ளார். காவல்துறையினர் அழைக்கப்பட்டு குறித்த நபர் கைது செய்யப்பட்டார்.
சம்பவத்தின் போது சிறுமி தனியாக நடந்து சென்றுகொண்டிருந்ததாகவும், மாலை 7 மணி அளவில் இச்சம்பவம் இடம்பெற்றதாகவும், சிறுமி அதிர்ச்சியடைந்த நிலையில் அவருக்கு உளநல சிகிச்சைகள் அளிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.