‛மன்மதன்' பாணியில் சிம்பு 51வது படம் உருவாகிறதா?

16 மாசி 2025 ஞாயிறு 10:59 | பார்வைகள் : 1969
தற்போது மணிரத்னம் இயக்கி உள்ள ‛தக்லைப்' படத்தில் நடித்திருக்கும் சிம்பு ,அடுத்தபடியாக பார்க்கிங் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன், தேசிங்கு பெரியசாமி, அஸ்வத் மாரிமுத்து ஆகியோர் இயக்கும் படங்களில் அடுத்தடுத்து நடிக்கிறார். இதில், தேசிங்கு பெரியசாமி இயக்கும் தனது 50வது படத்தை தானே தயாரித்து நடிக்க போகிறார் சிம்பு.
மேலும் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் சிம்பு நடிக்கும் 51வது படத்தில் ‛காட் ஆப் லவ்' என்பது சிம்புவின் கதாபாத்திரம். இப்படம் காதல் கதையில் உருவானபோதும் முழுக்க முழுக்க காதல் இல்லாமல் இன்னும் சில விஷயங்களும் கலந்துள்ளதாம். குறிப்பாக ஏற்கனவே சிம்பு நடித்த ‛மன்மதன்' பாணியில் ஒரு மாறுபட்ட படமாக இந்த படம் இருக்கும் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.