இரு அகதிகள் உயிரிழக்க காரணமாக இருந்த இருவருக்கு சிறை!
16 மாசி 2025 ஞாயிறு 07:00 | பார்வைகள் : 16104
இரு அகதிகள் கடலில் மூழ்கி உயிரிழந்ததற்கு காரணமாக இருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு விரைவில் சிறைத்தண்டனை வழங்கப்பட உள்ளது.
Boulogne-sur-Mer (Pas-de-Calais) நகரில் வைத்து இருவரும் பெப்ரவரி 13, வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர். அவர்கள் அகதிகள் சிலரை படகு ஒன்றில் ஏற்றி பிரான்சில் இருந்து பிரித்தானியாவுக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், இருவர் பலியாகியுள்ளனர்.
பெப்ரவரி 9 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றதை அடுத்து, இருவரும் 13 ஆம் திகதி கைது செய்யப்பட்டனர். இருவரும் சூடான் நாட்டைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. அவர்களுக்கு இருவருக்கும் விரைவில் சிறைத்தண்டனை விதிக்கப்பட உள்ளது.
அன்றைய ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 230 அகதிகள் பிரித்தானியா நோக்கி கடற்பயணம் மேற்கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
2






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan