பனிச்சரிவில் சிக்கி இருவர் பலி.. ஒருவர் படுகாயம்!!
15 மாசி 2025 சனி 18:51 | பார்வைகள் : 7354
பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்ட மூவர், பனிச்சரிவில் சிக்கியுள்ளனர். அவர்களில் ஒருவர் பலியாகியுள்ளார். மற்றைய இருவர் காயமடைந்துள்ளனர்.
இன்று பெப்ரவரி 15, சனிக்கிழமை இச்சம்பவம் Savoie மாவட்டத்தில் உள்ள பிரபல பனிமலையான Bonneval-sur-Arc இல் இடம்பெற்றுள்ளது. 30 வயதுகளையுடைய ஆண் மற்றும் பெண் ஆகிய இரு வீரர்களே பலியாகியுள்ளனர்.
பிற்பகல் 2 மணிக்கு அவசர பிரிவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, மீட்புக்குழு விரைந்து சென்றனர். ஆனால் மீட்புக்குழு சென்றடைவதற்கு முன்னர் நிலமை கைமீறிச் சென்றுள்ளது.
காயமடைந்த ஒருவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan