அகதிகள் படகு மூழ்கி.. ஒருவர் பலி..!!

15 மாசி 2025 சனி 09:48 | பார்வைகள் : 4541
கலே கடற்பகுதி வழியாக பிரித்தானியா நோக்கிச் சென்ற அகதிகள் படகு ஒன்று கடலில் மூழ்கியதில், ஒருவர் பலியாகியுள்ளார்.
பெப்ரவரி 14, நேற்று வெள்ளிக்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 70 அகதிகளை ஏற்றிக்கொண்டு படகு ஒன்று பயணித்த நிலையில், திடீரென படகு கடலில் கவிழ்ந்துள்ளது. கடற்படையினர் அழைக்கப்பட்டு அவர்கள் மீட்கப்பட்டனர்.
அகதிகளில் இருவர் தண்ணீரில் மூழ்கி மயங்கிய நிலையில், இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி இன்று சனிக்கிழமை காலை பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது