அபார சதம் விளாசிய குசால் மெண்டிஸ்! ருத்ர தாண்டவமாடிய இலங்கை கேப்டன்

14 மாசி 2025 வெள்ளி 09:46 | பார்வைகள் : 3278
அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் குசால் மெண்டிஸ் சதம் விளாசினார். கொழும்பில் நடந்து வரும் இரண்டாவது ஒருநாள் போட்டியில்
இலங்கை அணி முதலில் துடுப்பாட்டம் செய்தது.
நிஷான் மதுஷ்கா 51 ஓட்டங்கள் எடுத்து வெளியேற, குசால் மெண்டிஸ் மற்றும் சரித் அசலங்கா பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
இந்த கூட்டணி 94 ஓட்டங்கள் குவித்தது. அபாரமாக விளையாடிய குசால் மெண்டிஸ் (Kusal Mendis) சதம் அடித்தார். இது அவரது 5வது ஒருநாள் சதம் ஆகும்.
101 (115) ஓட்டங்கள் எடுத்திருந்த அவர் ஆடம் ஜம்பா ஓவரில் ஆட்டமிழந்தார். எனினும் அதிரடியில் மிரட்டிய சரித் அசலங்கா (Charith Asalanka) அரைசதம் அடித்து ஸ்கோரை வெகுவாக உயர்த்தினார்.
அவர் ஆட்டமிழக்காமல் 66 பந்துகளில் 3 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 78 ஓட்டங்கள் விளாசினார்.
அவருடன் சேர்ந்து சரவெடி ஆட்டம் ஆடிய ஜனித் லியானகே 21 பந்துகளில் 2 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 32 ஓட்டங்கள் எடுத்தார்.
இதன்மூலம் இலங்கை அணி 50 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 281 ஓட்டங்கள் குவித்தது. ட்வர்ஷுய்ஸ், ஹார்டி, அபோட் மற்றும் ஜம்பா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
2 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025