Seine-Saint-Denis : பாடசாலைகளில் பாதுகாப்பு பலப்படுத்தல்!
13 மாசி 2025 வியாழன் 07:00 | பார்வைகள் : 12208
Seine-Saint-Denis மாவட்டத்தில் உள்ள பல்வேறு பாடசாலைகளில் காவல்துறையினர் சிறப்பு கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த சில வாரங்களாக பாடசாலை வளாகங்களிலும், வளாகத்துக்கு வெளியேயும் தாக்குதல் சம்பவங்கள் பல பதிவாகியுள்ளன. அதைஒ அடுத்தே இந்த கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
பெப்ரவரி 10, திங்கட்கிழமை முதல் ஆரம்பமான இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள், பெப்ரவரி 15 ஆம் திகதி வரை தொடரும் என பரிஸ் காவல்துறை தலைமைச்செயலகம் அறிவித்துள்ளது.
கடந்த ஒரு மாதத்தில் Bobigny, Pantin மற்றும் Drancy நகரங்களில் மூன்று தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. இதில் மூன்று மாணவர்கள் காயமடைந்திருந்தனர்.


























Bons Plans
Annuaire
Scan