பிரபல இசையமைப்பாளர் கங்கை அமரன் மருத்துவமனையில் அனுமதி!
6 தை 2025 திங்கள் 09:19 | பார்வைகள் : 6741
கங்கை அமரன் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர், இயக்குனர், பாடல் ஆசிரியர், பாடகர் என பன்முகத் திறமைகளை கொண்டவர். அந்த வகையில் இவரை பலரும் ஆல் இன் ஆல் அமரன் என்று அழைப்பர். ஆரம்பத்தில் இசைஞானி இளையராஜாவின் தம்பி என்று அடையாளத்துடன் திரைத்துறையில் நுழைந்த இவர், தனது தனித்திறமையால் தனக்கென அசைக்க முடியாத அழிக்க முடியாத ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொண்டார்.
தற்போது 77 வயதான நிலையிலும் திரைத்துறையில் ஓயாது பணியாற்றி வரும் கங்கை அமரன் தற்போது புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு மானாமதுரை, சிவகங்கை ஆகிய பகுதிகளை சுற்றி நடைபெற்று வருகிறது. அப்போது படப்பிடிப்பில் கலந்து கொள்ள வந்த கங்கை அமரனுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதாகவும் உடனடியாக அவர் மானாமதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் தகவல் வெளியாகி வருகின்றன.
அதாவது பனிக்காலம் என்பதனால் அவருக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று சொல்லப்படுகிறது. மேலும் மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வரும் நிலையில் இந்த தகவல் அறிந்த கங்கை அமரனின் மகன்களான வெங்கட் பிரபு மற்றும் பிரேம்ஜி ஆகியோர் உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்துள்ளதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றது. எனவே ரசிகர்கள் பலரும் கங்கை அமரன் விரைவில் குணமடைய வேண்டுமென கூறி வருகின்றனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
3 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan