கட்டுநாயக்க விமான நிலையத்தில் நபர் ஒருவர் கைது!

5 தை 2025 ஞாயிறு 16:21 | பார்வைகள் : 4934
சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட தங்க ஆபரணங்களுடன் சந்தேக நபர் ஒருவர் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
அபுதாபியில் இருந்து இலங்கைக்கு வந்த பயணி ஒருவர் தொடர்பில் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விமான நிலைய பொலிஸார் சந்தேக நபரை நேற்று சனிக்கிழமை (04) கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து, 4 தங்கச் சங்கிலி, 1 பென்டன், 02 வளையல்கள், 2 தங்க வளையல்கள் மற்றும் ஒரு தங்க மோதிரம் ஆகியன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வெலம்பொட பகுதியைச் சேரந்த 25 வயதுடையவராவார்.
மேலும்,சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை விமான நிலைய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.