Paristamil Navigation Paristamil advert login

ரஷ்ய மற்றும் வடகொரிய படைகள் தொடர்பான விவரங்கள்

 ரஷ்ய மற்றும் வடகொரிய படைகள் தொடர்பான விவரங்கள்

5 தை 2025 ஞாயிறு 15:31 | பார்வைகள் : 6729


உக்ரைனின் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, ரஷ்ய மற்றும் வடகொரிய படைகள் ரஷ்யாவின் தெற்கு குர்ஸ்க் பிராந்தியத்தில் நடந்த ஒரு போர்களில் கடுமையான இழப்புகளை சந்தித்ததாக தெரிவித்துள்ளார்.

உக்ரைனிய மற்றும் மேற்கத்திய நாடுகளின் மதிப்பீடுகளின் அடிப்படையில், குர்ஸ்க் பிராந்தியத்தில் சுமார் 11,000 வடகொரிய படைகள் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

ஆகஸ்ட் மாதத்தில் ஒரு பெரிய எல்லை தாண்டிய ஊடுருவலை மேற்கொண்ட பின், உக்ரைனிய படைகள் குர்ஸ்க் பிராந்தியத்தில் பல பகுதிகளை கைப்பற்றியுள்ளன.

கடந்த வாரம் வெளியிடப்பட்ட ஒரு காணொளியில், ஜெலென்ஸ்கி குர்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள வடகொரிய படைகள் கடுமையான இழப்புகளைச் சந்தித்துள்ளதாகவும், அவர்களுடன் போராடிய ரஷ்ய படைகள் வடகொரிய படைகளை பாதுகாக்கவில்லை என்றும் குறிப்பிட்டார்.

மேலும், உயிருடன் உக்ரைனிடம் பிடிபடாமல் இருக்க வடகொரிய படைகள் தங்களது சொந்த இராணுவத்தால் கொல்லப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்